ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகும் இடமெல்லாம் வாகனம் வாடகை !


சமீபத்தில் டென்வர் நகரத்தில் மற்றொரு தெருவிற்கு செல்ல வேண்டும் என்ற தேவை. அதன் தூரம் 15+ மைல். பேருந்தில் செல்ல 45 நிமிடங்களாகும், உடன் பேருந்து கிடையாது. வாடகை வாகனம் எடுக்க நிறைய நிபந்தனைகள் உள்ளது.

நண்பர் ஒருவர் car2go என்ற நிறுவனத்தின் வசதியை பற்றி தெரிவித்தார்.




நடந்து செல்லும் வழியில் இந்த வாகனம் இருந்தது, தனது அடையாள அட்டையை மூலம் அந்த வாகனத்தை எடுத்தார் போக வேண்டிய இடத்திற்கு சென்று அதே அடையாள அட்டையின் மூலம் தனது பயணத்தை முடித்து கொண்டார்.

பின்வரும் காணொளி எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கும்.


ஒரு நிமிடத்திற்கு: ரூ. 25/-

இதில் பின்வருபவை அடங்கும்:

  1. காப்புரிமை
    1. இந்த வாகனத்தை சேதபடுத்தினால், அதற்க்கு தாங்கள் நஷ்ட ஈடு தர தேவையல்லை.
      1. தனி நபரின் காப்புரிமை பதிவில் இது இடம்பெறும்.
    2. வேறு வாகனத்தை / வேறு யாரின் சொத்தினை தாங்கள் சேதபடுத்தினால் அதன் நஷ்ட ஈட்டினை இந்த நிறுவனமே ஏற்று கொள்ளும்.
      1. தனி நபரின் காப்புரிமை பதிவில் இது இடம்பெறும்.
      2. போலீஸ் பதிவில் தாங்களின் பெயர் இருக்கும்.
  2. வாகனத்திற்கான எரிபொருளை நிறுவனமே ஏற்று கொள்ளும்.
  3. ஒரே நேரத்தில் 5 நபர்கள் பயணம் செய்யலாம்.

காசாங்காடு கிராமத்திலிருந்து வெளியில் செல்வதற்கு இது போன்ற வசதிகள் இருப்பின் கிராம குடிமகன்களுக்கு பயனுள்ளதாய் அமையும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக