திங்கள், 29 ஜூலை, 2013

எதுகை - சிங்கப்பூர் தேசிய தின பாடல் வரிகள் - ஆதரவு தேடி விண்ணப்பம்


காசாங்காடு இணைய குழுவிற்கு,

என் கிராமத்தை (http://www.kasangadu.com) இணையத்தில் பார்ப்பதில் பெரு மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். இணைய குழுவின் அயராத உழைப்பிற்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும்.

காசாங்காடு கிராமத்தின் பிறந்து சிங்கப்பூரில் வாழும் அமிர்தலிங்கம் அவர்களின் மகள் கற்பகமீனா. நான் பெண்டமீர் உயர் நிலை பள்ளியில் பயின்று வருகிறேன். பள்ளிகளில் இடையே நடக்கும் தேசிய தின  பாடல் வரிகள் எழுதும் போட்டியில் தகுதிபெற்றுள்ளேன். வாக்குகளின் அடிப்படையில் முதல் மூன்று தேசிய தின பாடல் தேர்ந்தெடுக்கப்படும்.

என்னுடைய பாடல் வரிகள் சிறப்பாக இருப்பின் எனக்கு வாக்களிக்கவும். உங்களுடைய ஆதரவு என்றும் எனக்கு தேவை.

இந்த பாடல் வரிகள் தேர்ந்தெடுப்பதின் மூலம் நம் கிராமத்திற்கு பெருமை சேர்ப்பேன்.

வாக்களிக்க கடைசி தினம்: 31 ஜூலை 2013
வாக்களிக்கும் சுட்டி: http://ameale.com.sg/edhugai/   
வாக்களிக்கும் முறை: 
 1. உலாவியில் இந்த சுட்டிக்கு செல்லவும் http://ameale.com.sg/edhugai/
 2. அந்த சுட்டியில் உள்ள காணொளியை காணவும்
 3. வலதுபுறம் உள்ள பள்ளியை தேர்ந்தெடுக்கவும்
  1. எனது பள்ளி Singayin Valimai by Bendemeer Secondary School தேர்ந்தெடுக்கவும்.
 4. கடைசியில் உள்ள பொத்தானை அழுத்தவும்
நன்றி.ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகும் இடமெல்லாம் வாகனம் வாடகை !


சமீபத்தில் டென்வர் நகரத்தில் மற்றொரு தெருவிற்கு செல்ல வேண்டும் என்ற தேவை. அதன் தூரம் 15+ மைல். பேருந்தில் செல்ல 45 நிமிடங்களாகும், உடன் பேருந்து கிடையாது. வாடகை வாகனம் எடுக்க நிறைய நிபந்தனைகள் உள்ளது.

நண்பர் ஒருவர் car2go என்ற நிறுவனத்தின் வசதியை பற்றி தெரிவித்தார்.
நடந்து செல்லும் வழியில் இந்த வாகனம் இருந்தது, தனது அடையாள அட்டையை மூலம் அந்த வாகனத்தை எடுத்தார் போக வேண்டிய இடத்திற்கு சென்று அதே அடையாள அட்டையின் மூலம் தனது பயணத்தை முடித்து கொண்டார்.

பின்வரும் காணொளி எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கும்.


ஒரு நிமிடத்திற்கு: ரூ. 25/-

இதில் பின்வருபவை அடங்கும்:

 1. காப்புரிமை
  1. இந்த வாகனத்தை சேதபடுத்தினால், அதற்க்கு தாங்கள் நஷ்ட ஈடு தர தேவையல்லை.
   1. தனி நபரின் காப்புரிமை பதிவில் இது இடம்பெறும்.
  2. வேறு வாகனத்தை / வேறு யாரின் சொத்தினை தாங்கள் சேதபடுத்தினால் அதன் நஷ்ட ஈட்டினை இந்த நிறுவனமே ஏற்று கொள்ளும்.
   1. தனி நபரின் காப்புரிமை பதிவில் இது இடம்பெறும்.
   2. போலீஸ் பதிவில் தாங்களின் பெயர் இருக்கும்.
 2. வாகனத்திற்கான எரிபொருளை நிறுவனமே ஏற்று கொள்ளும்.
 3. ஒரே நேரத்தில் 5 நபர்கள் பயணம் செய்யலாம்.

காசாங்காடு கிராமத்திலிருந்து வெளியில் செல்வதற்கு இது போன்ற வசதிகள் இருப்பின் கிராம குடிமகன்களுக்கு பயனுள்ளதாய் அமையும்.