புதன், 9 ஜூன், 2010

அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை பலகை


இது என்னுடைய முதல் அமெரிக்க பயணத்தின் அனுபவம். மிகவும் வளர்ந்த நாடு என்று அழைகின்றார்களே என்ன தான் அப்படி இருகின்றது என்று காண்பதிலும் ஒரு ஆர்வம். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் வந்திறங்கினேன். குடிநுழைவு பகுதியை முடித்து விட்டு வெளியில் வந்தவுடன் ஒரு பரபரப்பான வாழ்க்கை வெளியே.


வெளியில் வரும்போது என்னுடைய பெயர் பலகையை கொண்டு என்னை அழைத்து செல்வதற்காக காத்திருந்தார் அந்த வாகன ஓட்டுனர். "Welcome to America" என்ற அழைப்புடன் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கு இறங்கி அவரிடம் விடைபெற்று தங்கும் விடுதிக்கு சென்றேன்.

விடுதிக்கு முன் ஒரு எச்சரிக்கை பலகை இருந்தது. அதன் புகைப்படம் கீழே.



அதில் எழுதி இருப்பதாவது, இந்த பகுதியில் உள்ள இரசாயான பொருள்களினால் பிறப்பு குறைகள் மற்றும் இனபெருக்கை சம்பந்தாமான குறைகள், மற்றும் புற்று நோய் ஏற்பட காரணாமாக அமையலாம்.

பிழைப்புக்காக வந்த இடத்தில் என்னடா இந்த சோதனை அன்று மனதில் கொண்டு அந்த தங்கும் விடுதி வரவேற்ப்பு அதிகாரியிடம், இந்த எச்சரிக்கை பலகையில் எழுதி இருப்பது சரிதானா? என்று கேட்டேன்(மனதிற்குள் என்னடா இப்படி ஒரு மட்டமான ஒரு தங்கும் விடுதியில் தங்க வைத்துள்ளார்களே என்று ஒரு சந்தேகமும் கூட). அவர் மிகவும் அதிகம் சட்டம் பயின்றால் இந்த சூழ்நிலை தான் என்றார். மேலும் அதில் எழுதி இருப்பது உண்மை எனவும் கூறினார். உடன் எனது கல்லூரி நண்பருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன், "என்னடா இப்படி எச்சரிக்கை பலகை உள்ளதே"  இந்த விடுதியில் தங்குவதில் ஒன்றும் பிரச்னை இல்லையே என்று கேட்டேன். நண்பரும் அது எல்லா இடங்களிலும் உள்ள பலகை தான் ஒன்றும் பிரச்னை இல்லை என்றார். ஒரு வழியாக மனதை தேர்த்தி கொண்டு தங்கும் விடுதிக்குள் நுழைந்தேன். 

மறுநாள் காலை எழுந்து அலுவலகத்திற்கு சென்றேன். அங்கும் இது போன்ற எச்சரிக்கை  பலகை. ஊருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்து சேர்ந்ததை தெரிவித்தேன். மேலும் இது போன்று எச்சரிக்கை பலகை இருப்பதையும் சொன்னேன். வீட்டில் அனைவரும் போதுமப்பா சீக்கிரம் வந்துவிடு, முதலுக்கே மோசம் வந்திட போகுதே என்று அறிவுரை. ஒரு வழியாக சமாளித்து தொலைபேசி தொடர்பை முடித்து விட்டேன்.

தெரிந்த நண்பர்களிடம் கேட்டேன், அலுவலத்திலும் கேட்டேன். அனைவரும் எனக்கு ஒன்றும் திருப்தி அளிக்கும் வகையில் பதில் தரவில்லை.

இணையத்தில் தேட தொடங்கினேன். விபரங்கள் அனைத்தும் கிடைத்தது.

இது எல்லா இடங்களிலும் உள்ள இரசாயன பொருட்களுக்கு உள்ள எச்சரிக்கை. இந்த மாநிலத்தில் எச்சிரிக்கை பலகை உள்ளது, மற்ற இடங்களில் எச்சரிக்கை பலகை இல்லை. ஆனால் அதில் கூறப்பட்டுள்ள இரசாயான பொருட்கள் எல்லா இடங்களிலும் உள்ளது என்பதை கண்டறிந்தேன். அதிர்ச்சியுற்றேன் அது நம் கிராமத்திலும் அன்றாட வாழ்க்கை முறைகளிலும் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ளது. (பிளாஸ்டிக் பொருட்கள், Aspirin மாத்திரைகள், Asbestos போன்று நவீன வாழ்க்கை வசதி ஏற்படுத்தி தந்த பொருட்களும் அடங்கும்)

கலிபோர்னியா மாநிலம் அந்த இரசயான பொருட்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


2010 ஆம் ஆண்டின் புதிபிக்கபட்ட பட்டியல்.

http://oehha.ca.gov/prop65/prop65_list/files/P65single052010.pdf

படித்த பிறகு அப்படா இது உலகெங்கிலும் உள்ளது, இங்கு தெளிவாக விளக்கி உள்ளார்கள் மற்றபடி ஒன்றும் புதிதாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். மேலும் ஒவ்வொரு வருடமும் இப்பட்டியலில் பல இரசாயான பொருட்கள் செர்க்கபடுகின்றது. நம் கிராம மக்களும் இதை பற்றி தெரிந்து கொண்டு பயன் பெறலாமே.

பல்வேறு காரணங்களால் கிராமத்தில் தற்போது இயற்க்கை முறையில் குழந்தை பெற்று கொள்ளும் திறன் குறைந்து கொண்டே வருகின்றது. இங்கு கூறப்பட்டுள்ள இரசாயான பொருட்கள் கிராமத்திலும் பயன்பாட்டில் இருப்பதால் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக