செவ்வாய், 1 ஜூன், 2010

மின்படிப்பியும் நூலகமும்

சமீபத்தில் கிராமத்தின் தேவைகளில் இலக்க முறை நூலகம் பற்றி பேசினோம். விஞ்ஞான வளர்ச்சியில் நூலகத்தையே (320 கிராம்) கையில் எடுத்து செல்லும் வசதி மின் படிப்பியால் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் அருகாமையிலுள்ள "Barnes & Noble" (பார்ன்ஸ் & நோபெல்) புத்தக கடைகளில் "nook" (நூக்) மின்படிப்பியை பயன்படுத்தி பார்க்கலாமே என்று வாங்கினேன்.

படிப்பதற்கு மிகவும் பயனுள்ள கருவியாக உள்ளது. தமிழ் புத்தகங்களை படிக்க முடியுமா என்று ஒரு கேள்வி!. "பொன்னியன் செல்வன்" தமிழ் மின்புத்தகத்தை அக்கருவியில் சேர்த்தேன். மிகவும் தெளிவான எழுத்தகளுடன் படிக்க முடிந்தது. அந்த கருவியில் உள்ள தமிழ் புத்தகத்தை கீழே காணலாம்.


மேலும் இந்த கருவி மூலம், தினசரி நாளிதழ்கள், தேவைப்படும் புத்தகங்கள் மூன்றாம் தலைமுறை (3G) தொடர்பு மூலம் இந்த கருவிக்கு கிடைக்கும். இந்த சேவைகள் வேண்டுமெனின் மேலும் நீங்கள் அச்சேவைகளில் சந்தாதாராக ஆக வேண்டும். உலகத்தில் இணையத்தில் கிடைக்கும் புத்தகங்கள் அனைத்தையும் நொடியில் வாங்கும் வசதி.

மேலும் படிக்கும் போது குறிப்பு எடுத்து கொள்ள வேண்டுமெனின் விசைபலகை மூலம் குறிப்புகளை எடுத்து கொள்ளலாம்.

வளர்ந்த நாடுகளில் தேவைபடுகிறதோ இல்லையோ, அவசியம் நம் கிராமத்திற்கு தேவைப்படும் என எண்ணுகிறேன். ஏனெனில் தேவைப்படும் புத்தகங்கள், நாழிதல்கள் உடனுக்குடன் கிடைப்பதில்லை. இது போன்ற கருவிகள் மூலம் அந்த தேவைகள் தீர்க்கபடுகின்றது.

மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் படித்து சோர்ந்தது போனார்களோ இல்லையோ, புத்தக மூட்டை தூக்கியே சோர்ந்து போனார்கள். இது போன்ற கருவிகள் புத்தக மூட்டைகளை தூக்குவதை தவிர்த்து, படிப்பில் அதிக கவனம் செலுத்த உதவும். தமிழக அரசின் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களையும் இதில் படிக்கலாம்.

மேலும் பேப்பர் தயாரிக்க வெட்டப்படும் மரங்களை தடுக்க இது உதவும்.

மேலும், மடிகணிகளை (Laptop) விட இரு விதத்தில் இது மேம்பட்டு உள்ளது,

  1. இரண்டு வாரங்களுக்கு வடுக்குகளுக்கு மின்னேற்றம் (Battery charge) செய்ய தேவை இல்லை.
  2. பேப்பர் போன்று (eInk) காட்சி அளிக்கும் கருவி. நீண்ட நேரம் கண் உறுத்தாமல் படிக்க உதவும்.

இது போன்று பல மின்படிப்பிகள் தற்போது வெளிவந்துள்ளது. அவற்றில் சில,

Amazon Kindle
Barnes & Noble Nook
Kobo
Apple Ipad

படிப்பிகளின் ஒப்பீடு பற்றி இங்கே  தெரிந்து கொள்ளலாம்.

1 கருத்து: