ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

பாங்காக் விமான நிலையத்தில் - பாஸ்போர்ட் இல்லாமல்நான்  சிங்கப்பூரில் இருந்து  தாய்லாந்திற்கு பணியின் காரணமாக முதல்முறையாக சென்றிருந்தேன்.  இந்தியர்களுக்கு தாய்லாந்தில் ON ARRIVAL விசா கிடைக்கும்  என்றும் , அலுவலகத்தில் பணி முடித்து  திரும்பி வர நான்கு வாரத்திற்கு பின்புகாண   திரும்புவற்கான (RETURN)  டிக்கெட் கொடுத்து. இருந்தார்கள் . தாய் விமானம் -  பாங்காக் விமான நிலையம் சென்று அடைந்த போது   மணி இரவு  11.30 . நீண்ட விசா வரிசைக்கு  பின் , விசா அலுவரிடம் எனது பாஸ் போர்ட் ,  திரும்புவற்கான (RETURN)  டிக்கெட் மற்ற தேவையான அடையாள சீட்டையும் கொடுத்த பின்பு தான் ,  விசா இரண்டு வாரங்களில் திரும்புவற்கான (RETURN) டிக்கெட் இருந்தால் தான் கிடைக்கும் என்று   தெரியவந்தது . நான் விமான நிலையதில் வைத்திருந்த டிக்கெட்டை இரண்டு  வாரத்திற்கு மாற்றலாம் என்றாலும் அப்போதைய சூழ்நிலையில் மாற்ற முடியவில்லை , காரணம் மணி இரவு  12ஐ கடந்திருந்தது. தாய் விமானம் சேவை பணியாளர்கள் வேலை முடிந்து சென்றுர்ந்தர்கள்  , அவர்கள் மறுநாள் காலை 7  மணி அளவில் தான் சேவையை தொடங்குவார்கள் என்று தெரியவந்தது. நான் மறுநாள் காலை  8 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்.. நான்  சிங்கப்பூரில் உள்ள எனது மேலாளரை தொடர்புக்கொண்டால் அவர் அடுத்தநாள் காலை வரை இருந்து டிக்கெட்டை மாற்றிக்கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.  அது எனது முதல் பயிற்சியளிக்கும் (CLIENT TRAINING)) பணி என்பதால் சற்று  கவலைஅடைந்தேன். அப்போது எனது அடுத்த விமானத்தில் வந்த மற்றொரு வாடிக்கையாளராய் (CLIENT) சந்திக்க நேர்ந்தது. அவரிடம் எனது நிலைமையை சொல்லி யோசனை  கேட்டேன். அதன் பின் அவரும் நானும் அங்கு திறந்து இருத்த மற்றொரு விமான சேவை அதிகாரியுடன் பேசி எதாவது வேறு வழி உள்ளதா என்று கேட்டோம்.அவரின் ஆலோசனைப்படி நான் எனது பாஸ் போர்ட்-யும் , டிக்கெட்-காண பணத்தையும்  விமான நிலையத்தில் வேலை செய்யும் ஒருவரிடம் கொடுத்தால், அவர் வெளிய சென்று புது டிக்கெட் எடுத்து வருவார்  என்று  தெரிய வந்தது. என்னிடம் கடன் அட்டை மற்றும் கொஞ்சம் பணம் தான் இருந்தது , அந்த நண்பர் (வாடிக்கையாளர் (Client) இப்போது நண்பராகி இருந்தார்) டிக்கெட்-காண மீதி பணத்தை கொடுத்தார் , வேறு வழியில்லாமல் விமான நிலையத்தில் வேலை செய்யும் அந்த நபரிடம் அதனை கொடுத்து அவர் வரும் வரை காதிருந்தேன், கிட்டதட்ட ஒரு மணி நேரம் கடந்தும்  அந்த நபரை காணவில்லை, கடைசியாக அவர் பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டுடன் வந்து சேர்த்தார் , வெளியில் டிக்கெட் கிடைக்காததால்  வேறு ஒரு இடம் சென்று வாங்கி வந்ததாக  சொன்னார். உதவி செய்த நபரிடம் நன்றியை தெருவித்து அவர் செய்த உதவிக்க கொஞ்சம் பணத்தையும் கொடுத்து  பின் விசா எடுத்து விமான நிலையத்தில்  இருந்து வெளிய  வந்தேன்.  
 சரியான நேரத்திற்கு சென்று என்னுடைய பணியையும் மிக சிறப்பாக முடித்து சிங்கப்பூர் திரும்பினேன். அந்த நண்பரின் நட்பு முன்று வருடங்களுக்கு பின்பும் தொடர்கிறது.....

அன்புடன்,
அருண்குமார் ராமலிங்கம்,
தவிடம்வீடு, தெற்குதெரு
காசாங்காடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக