சனி, 20 பிப்ரவரி, 2010

நான் தொலைத்த பணப்பை - சுவாரசியமான அனுபவம்

சமீபத்தில் வீட்டருகில் உள்ள பூங்காவிற்கு மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதற்காக சென்றேன். அங்கு எதிர்பாராத விதமாக என்னுடைய பணப்பை (Wallet) தொலைந்து விட்டது.

அதில் உள்ள பொருட்களின் விபரம் கீழே,

75 - அமெரிக்கன் வெள்ளிகள், அனைத்து வங்கிகளின் கடன் அட்டைகள், பற்று அட்டைகள், வாகன ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டைகள் மேலும் முக்கிய முகவரிகள் மற்றும் முக்கிய தொலைபேசி எண்கள்.

தொலைத்தவுடன் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த பூங்காவின் அலுவலகத்திற்கு சென்று கேட்டேன். என்னுடைய பணப்பை சம்பந்தமாக ஒன்றும் தெரியவில்லை என்று கைவிரித்து விட்டார்கள்.

அனைத்து வங்கிகளையும் அழைத்து வங்கி அட்டைகளை  மேலும் பயன்படுத்தாமல் இருக்க தடுத்து விட்டேன். மறுநாள் காலையில் ஓட்டுனர் உரிமம் அலுவலகத்திற்கு சென்று வேறு உரிமத்தை வங்கி விட்டேன். இதில் தொலைந்தது 75 அமெரிக்கன் வெள்ளிகள் தான். தொலைந்த வருத்தத்தில், அன்று ஒரு நாள் வங்கி அட்டை இல்லாமல் பொழுதை போக்கி விட்டேன். ஏனெனில் பண அட்டைகளை யாரேனும் பயன்படுத்த நேரிட்டால் பிரச்சனைகள் ஏராளம்.

மறுநாள் காலை காவல் துறையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைந்த என்னுடைய பணப்பை அங்கு உள்ளது, வந்து வாங்கி கொள்ளும்படி அழைத்தார்கள்.

மிகவும் ஆச்சரியாமாக இருந்தது. தொலைந்த பொருள் மறுபடியும் கிடைக்கும் என நம்பிக்கை இல்லாத போது இந்த அதிர்ச்சி.

என்ன தொலைந்ததோ அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் அதே நிலையில். அதிர்ச்சியில் மேலும் அதிர்ச்சி. பொருட்களின் திருப்பி தந்த காவல்துறையின் உரைகள் கீழே.

 
வெள்ளிகளின் விபரங்கள்.


வெள்ளிகளை போட்டு வைக்கப்பட்ட பை.

 வங்கி அட்டைகள், அடையாள அட்டைகள் போட்டு வைக்கப்பட்ட பை.
 

ஓட்டுனர் உரிமம் (CO DL), பணப்பை போட்டு வைக்கப்பட்டுள்ள பைகள்.

இது போன்ற நிகழ்வுகளில் தான் நேர்மையான மக்கள், நேர்மையான காவல் துறையினர்களை பார்க்க முடிகிறது.  இது போன்ற நிகழ்வுகளை பார்த்தவுடன், மக்கள் மீதும், அரசு துறையினர் மீதும் அபார நம்பிக்கை வருகிறது.

மேலும், changeling படம் பார்த்தேன். உண்மையான நிகழ்வுகளை படமாக்கபட்டது. ஒரு தாய் தான் தொலைத்த குழந்தையை "லாஸ் ஏஞ்சலீஸ்" காவல் துறையிடம் புகார் செய்து எவ்வாறு சிரமப்பட்டாள் என்பது தெளிவாக தெரியும்.

2 கருத்துகள்: