தினமும் வேலைக்கு செல்வதற்கு பேருந்தில் பயணம் செய்வது வழக்கம். அனைவரும் மிக அமைதியாக வரிசையில் நின்று பேருந்தில் ஏறுவதும் எந்த வித சலனமும் இல்லாமல் பேருந்து இயங்குவது வியப்பாக இருந்தது. இவ்வாறு கட்டுபாடுடன் பேருந்து நிறுவனங்கள் எவ்வாறு நடைமுறைபடுத்துகின்றன என்று எண்ணுவதுண்டு. ஒரு நாள் பேருந்தில் உள்ள எச்சரிக்கை பலகையை பார்த்தேன், புகைப்படம் கீழே.
அதில் எழுதி இருப்பதாவது,
பேருந்தில் ஏதேனும் தொந்தரவு செய்தால் அதிகபட்சமாக 750,௦௦௦ அமெரிக்கன் வெள்ளிகள் (3 1/2 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கவும், 16 வருடம் சிறை தண்டனையும் அளிக்க நீதமன்றதிர்க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சட்ட மீறல்களையும் போலீசிடம் புகார் செய்யப்படும்.
இது போன்று யாரேனும் செய்தால் எவ்வாறு ஆதாரம் காண்பிப்பார்கள் என்று நீங்கள் எண்ண நேர்ந்தால், அதன் பதில் கீழே.
மேலே உள்ள படத்தில் நிகழ படம் எடுக்கும் கருவியை பார்க்கலாம். பேருந்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இது போன்ற கருவிகள் உள்ளது. யாரிடமாவது போய் சாட்சி கேட்க வேண்டுமா என்ன? அல்லது தவறு செய்ய யாராவது யோசிப்பார்களா என்ன?
மேலும் பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் கிரிமினல் குற்றம்.
இடம்: ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாநிலத்தில்.
கீழே கிராமத்தில் ஒரு நாள் பயணம் செய்யும் போது எடுத்த புகைப்படம்,
இடம்: காசாங்காட்டிலிரிந்து பட்டுக்கோட்டை சென்ற லிங்கம் என்ற சிறுபேருந்து, வளவன்புரம் அருகில்.
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
5 best merit casino【Malaysia】tenyuk no deposit
பதிலளிநீக்குThe Best Best カジノ シークレット 5 Best 5 Benefits for Online Casinos In South Africa; Benefits 카지노사이트 and Rewards of Play 메리트카지노총판 Online Casino Games; Best Casino Apps in South Africa