திங்கள், 11 ஜனவரி, 2010

பேருந்தில் தொந்தரவு செய்தால் 3 1/2 கோடி ரூபாய் அபராதம்

தினமும் வேலைக்கு செல்வதற்கு பேருந்தில் பயணம் செய்வது வழக்கம். அனைவரும் மிக அமைதியாக வரிசையில் நின்று பேருந்தில் ஏறுவதும் எந்த வித சலனமும் இல்லாமல் பேருந்து இயங்குவது வியப்பாக இருந்தது. இவ்வாறு கட்டுபாடுடன் பேருந்து நிறுவனங்கள் எவ்வாறு நடைமுறைபடுத்துகின்றன என்று எண்ணுவதுண்டு. ஒரு நாள் பேருந்தில் உள்ள எச்சரிக்கை பலகையை பார்த்தேன், புகைப்படம் கீழே.

அதில் எழுதி இருப்பதாவது,

பேருந்தில் ஏதேனும் தொந்தரவு செய்தால் அதிகபட்சமாக 750,௦௦௦ அமெரிக்கன் வெள்ளிகள் (3 1/2 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கவும், 16 வருடம் சிறை தண்டனையும் அளிக்க நீதமன்றதிர்க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சட்ட மீறல்களையும் போலீசிடம் புகார் செய்யப்படும்.

இது போன்று யாரேனும் செய்தால் எவ்வாறு ஆதாரம் காண்பிப்பார்கள் என்று நீங்கள் எண்ண நேர்ந்தால், அதன் பதில் கீழே.

மேலே உள்ள படத்தில் நிகழ படம் எடுக்கும் கருவியை பார்க்கலாம். பேருந்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இது போன்ற கருவிகள் உள்ளது.  யாரிடமாவது போய் சாட்சி கேட்க வேண்டுமா என்ன? அல்லது தவறு செய்ய யாராவது யோசிப்பார்களா என்ன?

மேலும் பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் கிரிமினல் குற்றம்.

இடம்:  ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாநிலத்தில்.

கீழே கிராமத்தில் ஒரு நாள் பயணம் செய்யும் போது எடுத்த புகைப்படம்,

இடம்:  காசாங்காட்டிலிரிந்து பட்டுக்கோட்டை சென்ற லிங்கம் என்ற சிறுபேருந்து, வளவன்புரம் அருகில்.

சனி, 2 ஜனவரி, 2010

ரஷ்மோர் குன்றும், தஞ்சை பெரியகோவிலும்

சமீபத்தில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள "வடக்கு டக்கோட்டா" மாநிலத்திற்கு ரஷ்மோர் குன்றை பார்க்கலாம் என்று சென்றேன். அந்த குன்றின் புகைப்படம் கீழே.மிக சிறப்பாக ஒரு மலையில் செதுக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிகள். ஜார்ஜ் வாஷிங்டன் (1732–1799), தாமஸ் ஜெபர்சன் (1743–1826), தியோடோர்  ரூசெவேல்ட் (1858–1919) மற்றும் ஆபிரகாம் லின்கன் (1809–1865). சென்று வந்தவுடன் ஒரு அமெரிக்கர் கேட்டார், பார்க்க உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்ததா என்று? உண்மையில் எனக்கு ஆச்சிரியமாக இல்லை என்றேன். இவர் கேட்கும் போது எனக்கு தஞ்சை பெரிய கோவில் தான் ஞாபகத்திற்கு வந்தது. அவரிடம் சொன்னேன், காசாங்காடு கிராமதிளிரிந்து  25 மைல் தூரத்தில், பிரகதீஸ்வரர் பெரிய கோவிலில், 80 டன் எடையுள்ள பழிங்கி கல்லை செதுக்கி ஒன்பதாம் நூற்றாண்டிலே கோபுரத்தின் உச்சியில் வைத்துள்ளார்கள் என்றேன். அச்சியர்த்திர்க்கு உள்ளாகினார் அந்த அமெரிக்கர்.
நன்றி.